Friday, 13 July 2012

YAHOO MAIL USERS - PLEASE CHECK WHETHER YOUR PASSWORD IS SAFE

இணைய தளங்களை பயன்படுத்துபவர்களின் ரகசிய குறியீடுகளை (பாஸ் வேர்டுகள்) திருடி அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் தகவல்களை ஒரு கும்பல் திருடி வருகிறது. இது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரபலமான 'யாகூ' இணைய தளத்தில் 4 லட்சத்து 53 ஆயிரம் பேரின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்)  திருடப்பட்டுள்ளன. இது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது எப்படி நடந்தது? யார் திருடினார்கள் என்று தெரியவில்லை என 'யாகூ' இணைய தளம் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் இங்கிலாந்து தலைமை அலுவலக நிர்வாகி பி.ஆர். கரோலின் மோக்லியோட் ஸ்மித் கூறும்போது, இச்சம்பவம் நடந்தது உண்மைதான். அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்க இயலாது என அவர் மறுத்துவிட்டார்.
http://dazzlepod.com/yahoo/

--
M.BalaSubramanian
+91.9843255462



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.